சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக உருவாக்கம்” திட்டம் தொடர்பான மாகாண மாவட்ட கலந்துரையாடல் இன்று(25) நடைபெற்றது.

 

குறித்த திட்டம் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன், அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ளது.

 

இக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

 

இதன்போது, குறித்த திட்டம் தொடர்பான அறிமுகத்தினைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

இக் கலந்துரையாடலில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்துரராசா, யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜென்சி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் உரிமைமைகள் மேம்பாடு உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *