நேரகாலத்திற்கு வருகை தந்து உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு வேழமாலிகிதன் வேண்டுகோள்

நேரகாலத்திற்குகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிரும் இல்லத்தில் நவம்பர் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந் நிலையில் 27 ஆம் திகதி அன்று அதிகளவான மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மாவீரரின் பெற்றோர் மற்றும் உரித்துடையவர்கள் உறவினர்கள் உரிய நேர காலத்தில் வருகை தந்து உங்களது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 27 ஆம் நாள் அன்றைய தினம் மாலை 4 மணிக்குப் பின்னர் கனகபுரம் தூயிலுமில்ல முன் வீதி மூடப்பட்டிருக்கும்.

ஆகையால் இவ்விதி ஊடாக பயணிக்கும் ஆடைத்தொழிலாளர் பேருந்து மற்றும் ஏனைய சாரதிகளும் மாற்று வீதியினைப் பயன்படுத்துமாறு அனைத்து வாகன சாரதிகளும் 4.00 மணிக்கு பின்னர் மாவீரர் துயிலுமில்லவீதி முற்றாக மூடப்பட்டிருப்பதன் காரணமாக  மாற்று வீதியை பயன்படுத்துமாறு அனைத்து வாகன சாரதிகளையும் வேண்டி நிற்பதாக தெரிவித்தார்.

அன்றைய தினம் மக்களின் பாதுகாப்புக்காக பொலிஸாரின் உதவியும் நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு அன்றைய தினம் தனியார் போக்குவரத்து கழகத்தினர் பரந்தன் பகுதியில் இருந்து 3.00 தொடக்கம் மாவீரர் துயிலுமில்லம் செல்வதற்கான இலவச பேருந்து சேவையினை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று டிப்போ சந்தியில் இருந்து 3.30 மணி தொடக்கம் தனியார் பேருந்து கழகத்தினர் இலவச பேருந்து சேவை இடம்பெற உள்ளதாகவும் மக்கள் இச்சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று மக்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறித்த தினத்தன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *