கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடு வட்டாரத்துக்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(26) வட்டக்கச்சி சந்தையடி பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர் மற்றும் அக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்குமாக அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கலந்து கொண்டு தனது அஞ்சலியை செலுத்தினார்.

