கிழக்கு மாகாணத்திலிருந்து உயிர் நீத்த தன் பிள்ளைகளை நினைவு கூர வந்த உறவுகள் தர்மபுரம் பகுதியில் வைத்து இன்று(27) மதிப்பளிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயிர்நீத்த அதிக மாவீரர்களுடைய வித்துடல்கள் விதைக்கப்பட்ட விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தலை மேற்கொள்ளும் பொருட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலிருந்து உறவுகள் வருகை தந்தனர்.

