உடுத்துறை துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் இறுதி நினைவேந்தல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் இன்று(27) பிற்பகல் 6:5 மணியளவில் மணியோசை இசைக்கப்பட்டு பிற்பகல் 6:6ற்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பொது நினைவேந்தல் பிரதான கல்லில் மலர் மாலை போடப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சி கரமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்  உரித்துடையோர், பொது மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,  பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அருட்தந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *