பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல், எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி, பகடிவதையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் குறித்த 19 மாணவர்களும் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(03) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த மாணவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

