கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக நான்கு பிரதேச செயலகங்களிற்கும் 277மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார்.
இன்று(06) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளினை சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் 25000ரூபா பணம் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 2153 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வைப்பில் இடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
500மாடுகளும் 200ஆடுகளும் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

