கடந்த ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 608 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்­கையின் சுற்­றுலாத் துறை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு முக்­கிய பங்­காற்­று­வ­துடன் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 10% இற்கும் அதி­க­மான பங்­க­ளிப்­பையும், மில்­லியன் கணக்­கான வேலை வாய்ப்­பு­க­ளையும் வழங்­கு­கின்­றது.

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 38,744 ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *