கிளீன் ஶ்ரீலங்கா நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்பன “கிளீன் ஶ்ரீலங்கா – கிளீன் ஶ்ரீலங்கா நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் ” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் நாளைய(09) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறள்ளது.
இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம் தொடர்பான மக்களிற்குரிய நிவாரண சேவைகளிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
• அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதி ஏற்படுத்துதல்,
• சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல்,
• மக்கள் நேய வினை நிர்வாக அமைப்பை வலுப்படுத்தல்.
இத்திட்டம் மூலம்:
• பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்கும் அமைப்பை உருவாக்குதல்,
• சமூக மட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்,
• சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் தரமான நிர்வாகத்தை மேம்படுத்துதல்
எனும் நோக்கங்கள் அடைவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள்:
• பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்
• ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை)
• ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்
• மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள்
• வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள்
• காணி தொடர்பான சேவைகள்
• சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள்
• வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள்
• திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள்
• மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்
• கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள்
• கிராம அபிவிருத்திப் பிரிவு தொடர்பான சேவைகள்
• சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள்
• பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள்
• கமநல சேவைகள் திணைக்களம் தொடர்பான சேவைகள்
• ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• மின்சார சபை தொடர்பான சேவைகள்
• நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள்
• தென்னைப் பயிர்ச் செய்கை சபை தொடர்பான சேவைகள்
• பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
இவற்றுடன் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத்திணைக்களத்தின் விசேட மருத்துவமுகாம், பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறும்.
மக்கள் அனைவரையும் குறிப்பிட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரிய சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *