றஜீவன் எம்.பிக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குமிடையில் விசேட சந்திப்பு

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் தலைமையிலான குழுவினருக்கும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திருமதி உஷா மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று(09) காலை இடம்பெற்றது.

இச் சந்திப்பில் புயலிற்குப் பிந்திய வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு, அவசரத் தேவைகள், நிவாரணப் பொருட்கள் விநியோகம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இச் சந்திப்பில தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஸாம், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபனின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் உதயபாஸ்கரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரிதா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *