கிளிநொச்சி திருவையாறில் கோர விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவையாறு பகுதியில் இன்று(10) நண்பகல் கிளிநொச்சி பகுதியில் இருந்து திருவையாறு பகுதியை நோக்கிப் பயணித்த டிப்பர் திருவையாறு பகுதியில் வீட்டிற்கு முன்னால் இருந்த வீதியில் நிறுத்தி மோட்டார் சைக்கிளின் மேல் அமர்ந்திருந்தவரை டிப்பர் பின்புறமாக மோதி தள்ளியதில் செல்வராசா ஷோபனாத் 35 வயது திருவையாறு வின்சன் விதி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை கிளிநொச்சி பொஸிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *