முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் மல்லாவி நகரப்பகுதியில் இரவு வேளையில் வீதியில் கால் நடைகள் பயணிகளுக்கு விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடு வீதியில் இருப்பதை காணக்கூடியவாறு உள்ளது.
இரவு கால் நடைகளை கட்டுப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இக்கால் நடைகள் மல்லாவி பொலிஸ் நிலையத்திற்கு முன் பிராந்திய ஊடகவியலாளரின் கண்களில் தென்பட்டு பிரதேச சபை உறுப்பினர்களிடம் வினவிய போது சபை தீர்மானம் எடுக்கப்படவில்லை. கட்டுப்படுத்தபடுமாம் எப்போது பயணிகள் விபத்துக்குள்ளான பின்னரா? இதற்கு பொலிசார் அதிகாரிகள் கவனத்தில் எடுப்பீர்களா? என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

