பச்சிலைப்பள்ளியில் வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார பொருட்கள் வழங்கல்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(10) நடைபெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் தலைமையில் பி.ப2.30 மணிக்கு சிறிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் 7.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் – கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கருணநாதன் இளங்குமரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விடய உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *