நடிகர் சூர்யா கைவசம் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் ‘கருப்பு’, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் ‘சூர்யா 46’, மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் ‘சூர்யா 47’ ஆகிய 3 படங்கள் இருக்கிறது.
இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – FORTUNE FOUR சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


