மேஷம்
விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவனைத்துப் செல்லுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாள்.
சிம்மம்
பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
கன்னி
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.முயற்சிகள் பலிதமாகும் நாள்.
துலாம்
நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வரும்.புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பீர்க்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
விருச்சிகம்
சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கு ஐந்து வேலைகளை பார்க்கவேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்று ஒரு டென்ஷன் இருக்கும்.பண விஷயத்தில் கராராகா இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
தனுசு
மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.
மகரம்
உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
கும்பம்
உங்கள் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரத்தை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள். கனவு நினைவாகும் நாள்.
மீனம்
தாய்வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

