உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் – மகாவிலச்சிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உலுக்குளம் கிராம வீதியில் நேற்று(04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலுக்குளம் பகுதியிலிருந்து பேமடுவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த நபர், உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிய நிலையில் பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பேமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மகாவிலச்சிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *