புனானையில் மோட்டார் சைக்கிள் –  சிறியரக மீன்லொறி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு கொழும்பு வீதியில் புனானை 126 மைல் கல் பகுதியில் நேற்று(31) இரவு நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்ததுடன் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிதென்னையைச்சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவர் ஸ்தலத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் புனாணை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *