காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கத்தான்குடி பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான 1வது  பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அண்மையில் (30) வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்   பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு  தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இக் கூட்டத்தில் சென்ற பிரதேச அபிவிருத்திக குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக  பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரினால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன்

கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும்  ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

 

மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகள் ,  மற்றும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரினால் விளக்கக் காட்சிகள் மூலம் தெளிவுபட்டது.

 

அதனைத் தொடர்ந்து காணி, கல்வி, நகரசபை, வைத்தியசாலை, மற்றும் சுகாதாரம் , கால்நடை, போக்குவரத்து, பொலிஸ்  போன்ற முக்கிய  திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

 

காத்தான்குடி பிரதேச  செயலாளர் திருமதி .நிஹாறா மௌஜுத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நகரசபை தவிசாளர் எஸ். எச். எம்.அஸ்பர்,மற்றும்  ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் யூ.கே.எம்.அப்துல்லா,உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம் .எஸ் .சில்மியா, கணக்காளர் ஏ.ஆர்.ஏ.

முப்லிஹ் , பிரதேச செயலகப் பிரிவின் திணைக்களத்தலைவர்கள் , நகரசபை உறுப்பினர்கள், பிரதேசத்தின் திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *