மட்டக்களப்பு இந்துக்கல்லூரி 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான இந்துக்கல்லூரி தனது 80வது ஆண்டு நிறைவு நாளையொட்டிய நடைபவனி இன்று(07) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில், பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் குறித்த நடைபவனியானது ஆரம்பிக்கப்பட்டது.

நடைபவனியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபை ஆணையாளர் மற்றும் பழைய மாணவர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர். மூன்று இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கண்காட்சி பவனி மற்றும் பல்வேறு வகையான வாகனப் பேரணியும் இடம்பெற்றது.

பேரணி புகையிரத நிலைய வீதி, அரசடி பல்கலைக்கழக சுற்றுவட்டம், திருமலை ஊடாக தாண்டவன்வெளி வரை சென்று மீண்டும் புகையிரத நிலைய வீதியூடாக பாடசாலைக்கு திரும்பி முடிவடைந்தது.

பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா மாஸ்டர் உருவப்படத்தை மாணவர்கள் தாங்கிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *