சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சபை தெரிவு

சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சபையின் புதிய தலைவராக ஆதம்பாவா அப்துல் பஷீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தின் உப தலைவராக செய்னுதீன் அப்துல் லத்தீப் தெரிவு செய்யப்பட்டார். சங்கத்தின் ஏனைய இயக்குநர் சபை உறுப்பினர்களாக உதுமாலெப்பை முஹம்மது ஹனிபா, அப்துல் ரகுமான் அப்துல் மனாப், அபூபக்கர் முஹம்மது றஸீட், அப்துல் லத்தீப் அஹ்மத் இபாஸ் அல்ஹம், முஹம்மது செயின் உம்முல் பைறோஸா, இப்றாலெவ்வை ஜமீலா மற்றும் கலீலுர்ரஹ்மான் பாத்திமா பர்ஹானா ஆகியோர்களை சங்கத்தின் பொதுச் சபை உறுப்பினர் அஹமதுலெவ்வை பிரேரித்தார்.
சபையினர் இத்தெரிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேற்படி சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் இன்று(07 காலை கமு/கமு/ சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அல் – ஹாஜ் பென்ஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அல் – ஹாஜ் ஜலால்தீனின் மேற்பார்வையில் இந்த பணிப்பாளர் சபை தெரிவு இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் சார்பில் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களாக இருந்த கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அஷ்ரப், நிசாமுத்தீன், அன்வர் உட்பட சங்கத்திற்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெகநந்தினி, சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சரளா ரமேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *