மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வனஜீவராசிகள் பாதுகாப்பு சுற்று வட்டார காரியாலயத்திற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (11) கிராமத்திற்குள் உள்நுளைந்துள்ள இக்காட்டு யானை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அப்பகுதியில் பெரும்போக வேளாண்மைச் செய்கை அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் வயலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கிய நிலையிலேயே இக்காட்டுயானை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மின்சாரக கம்பி வேலிநடப்பட்ட நபரை சந்தேகத்தின் பெயரின் பொலிஸார் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

