அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக நேற்று(11) நிந்தவூரில் 1.7 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட கடற்கரை பூங்காவினை பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக பிரதேச சபை செயலாளரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நி்ந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லதீப், கிழக்கு மாகாண கரையோ பாதுகாப்புத் திணைக்கள பொறியியாளர் துலஷிதாஸன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான சம்சுன் அலி, இப்தகார், பிரதேச சபையின் செயலாளர் சிஹாபுதீன், கரையோரம் பேணல் திணைக்களத்தினுடைய உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியினுடைய தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இனைப்புச்செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த இத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

