வாழைச்சேனை முஸ்லிம் வட்டார வீதிகளுக்கு எல்ஈடி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்

​வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் முயற்சியினால், எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு வாழைச்சேனை முஸ்லிம் வட்டாரத்தைச் சேர்ந்த இருள் சூழ்ந்த வீதிகளுக்கு எல்ஈடி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்று(12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக வாழைச்சேனை-04 பகுதியில் உள்ள மக்களடி வீதி, மீன்பிடி வீதி, முனிரா பாடசாலை வீதி மற்றும் ஷாலிஹாத் பள்ளிவாயல் வீதி ஆகியவற்றுடன் அந்நூர் பாடசாலை வீதி, வை. அஹமட் பாடசாலை வீதி ஆகிய இடங்களில் இன்று மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

குறித்த பணியினை முன்னெடுக்க உதவிய கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுதாகரனுக்கும் சபையின் செயலாளர், ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் தெரிவித்தார்.

ரமழான் கால இரவு நேர வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *