வாழைச்சேனையில் காட்டுயானை தாக்குதல்; 68 வயது மூதாட்டி உயிரிழப்பு, நால்வர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நகரிலும் அருகிலுள்ள கிராமப்பகுதியிலும் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் இரண்டு காட்டுயானைகள் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைச்சேனை நகரப்பகுதியில் இடியப்பம் விற்பனை செய்து கொண்டிருந்த 68 வயதுடைய மூதாட்டி ஒருவரை காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிராமப்பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக நால்வர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து காட்டுயானைகளை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பாடசாலை மாணவர்களை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றதுடன் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *