முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன்(13) நிறைவடைகிறது.
இதனையடுத்து, நாளை(14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *