இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
“தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வீடமைப்பு நிர்மாணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

