மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக இன்று(04) ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, டுபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பிலிருந்து டுபாய்க்கு யுஎல்231 விமானங்களும், டுபாயிலிருந்து கொழும்புக்கு யுஎல்232 விமானங்களும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

