மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 ஆம் ஆண்டில் மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,620 ஆகும்.

இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,676 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,445 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,573 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,538 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,525 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 930,794 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *