மாம் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு ஆதம்பாவா எம்.பி அனுதாபம்

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

இதற்காக இலங்கைக்கான ஈரானியத் தூதுவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த அனுதாபப் புத்தகத்தில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா நேற்று தனது அனுதாபத்தை பதிவு செய்தார்.

அதேவேளை, அவர் இலங்கைக்கான ஈரான் நாட்டுத் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷை சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *