இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை தரப்புக்கு இடையில் முக்கிய உயர்மட்ட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமான முறையில் அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இதேவேளை, ஓமான் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல் புசைதி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசி வாயிலாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் வலியுறுத்தினார்.

