ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தின் கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தினால் கல்விக் கண்காட்சி நேற்று(11) அதிபர் இராதாகிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கற்றல் கற்பித்தல் சம்பந்தமான பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக நவீன கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி இலகுவாக மாணவர்கள் கற்பதற்கான வழிமுறைகள் செய்துகாட்டப்பட்டன.
ஆசிரியர்கள், மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியானது மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவியாக அமைந்திருந்தது.

