பூட்டப்பட்டிருந்த வர்த்தக நிலையத்தைத் திறந்து அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கிருந்த இரண்டு லொறிகளில் பெருமளவிலான எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த எரிவாயு சிலிண்டர்கள் வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாக நிர்வாகத் தரப்பு வாதிட்டது. எனினும், கையிருப்பு குறித்த அறிவிப்புப் பலகையில் “எரிவாயு இல்லை” எனத் தவறான தகவலை வெளியிட்டமை உறுதி செய்யப்பட்டது.
நுகர்வோரை ஏமாற்றி, எரிவாயு கையிருப்பு இல்லை எனக்கூறிய குற்றத்திற்காக குறித்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, அங்கு காத்திருந்த நுகர்வோருக்கு உடனடியாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

