வாழைச்சேனையில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை நிலையமான வீடு ஒன்றை நேற்று(11) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை சம்பவ தினமான நேற்று இரவு பொலிஸார் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதன் போது போதைப்பொருள்; வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியான பெண்ணிடம் இருந்து 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் எனவும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது  .

இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *