இலங்கையில் பால் மா விலை அதிரடியாக அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 50 ரூபாயால் அதிகரிக்கும் என்றும், 1 கிலோ பால்மா பக்கற் ஒன்றின் விலை 125 ரூபாயால் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளமை போன்ற காரணங்களால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

