லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க தீர்மானம்

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

 

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், மாதாந்த கல்வி நிதியுதவி வழங்குவது குறித்து ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

 

நேற்று (20) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

 

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் தற்போது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வகையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக பல்வேறு நிதியுதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

அதன் மற்றுமொரு கட்டமாக, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *