பூநகரி பிரதேசத்தில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாது காணப்படும் 26 காணி பிணக்குகளுக்கு தீர்வு வழங்குவதற்கான காணி நடமாடும் சேவை மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) தலைமையில் நேற்று(22) காலை 08.30 தொடக்கம் இரவு 06.30 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையில் வட மாகாண மாகாணக் காணி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பூநகரி பிரதேச செயலாளர், உதவி மாகாணக் காணி ஆணையாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள நில அளவையாளர், நிர்வாக கிராம அலுவலர், காணி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் சேவையில் 12 காணிப்பிணக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்துப் பிணக்குகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

