தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடைபவனி

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினரின் இணைப்புடன் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று(23) கிளிநொச்சியில் நடைபெற்றது.

 

இந்த நடைபவனி கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது.

 

நிகழ்வின் போது, போதைப்பொருள் பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துரைகளும் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றன.

 

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *