மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான விலை நிர்ணயக் கூட்டமானது மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று(25) இடம்பெற்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பல்வேறு காரணிகள் தொடர்பாகவும் துறைசார் அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டமைக்கு அமைவாக பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கான விலைகள் இக்கலந்துரையாடல் மூலமாக மீள் நிர்ணயம் செய்யப்பட்டன.
இதன்போது, மணலுக்கான நிர்ணய விலைகளும் மாற்றியமைக்கப்பட்டன.
இதற்கமைய, மணல் யார்ட் (மணல் ஸ்டோர்) உள்ள இடங்களில் மணலைப் பெற்றுக் கொள்ளும் போது, அதற்குரிய விலையாக 3 கியூப் உள்ள டிப்பர் வாகனத்திற்கு 39,250 ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது அது ரூபா 43000 ஆகவும், ஏனைய பிரதேசங்களில் 51,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது ரூபா 57000 இற்கும் எதிர்வரும் காலங்களில் விற்பனை செய்யப்படுமென புதிய விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றங்களுக்கேற்ப இந்த நிர்ணய விலைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

