2026 ஆம் ஆண்டின் ஹஜ் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கும், இலங்கை யாத்திரிகர்களின் நலன்புரிகளை ஆராய்வதற்குமாக மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் உள்ளிட்ட இலங்கை ஹஜ் தூதுக்குழுவினர் இன்று (23) சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல்அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர் நீதியரசர் எம். ரீ. முஹம்மத் லபார் மற்றும் தூதரக அதிகாரிகள் மிகவும் அன்போடு வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

