அநுராதபுரத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

அநுராதபுரம் மகா பாலடிகுளம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அநுராதபுரம் வலய மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 127 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 121 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் போதைப்பொருளை அளந்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட பெண் அந்தப் பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்த முக்கிய நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், அவருடன் தொடர்புடைய வலையமைப்புகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *