நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று தனது 84வது வயதில் காலமானார்.

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸ், கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி. இவர்கள் சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்தனர்.

 

அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார்.

 

இந்நிலையில், அஜித்தின் தாயாரான மோகினி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவுரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

 

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *