6 உலகக் கிண்ண தொடர்களில்  கோல் அடித்த முதல் வீரராக  ரொனால்டோ உலக சாதனை

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் ஆறு வெவ்வேறு உலகக் கிண்ண தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026) கோல் அடித்த உலகின் முதலாவது மற்றும் ஒரே வீரர் என்ற அசுர சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

 

இதுவரை உலகக் கிண்ண வரலாற்றில் போர்த்துக்கல் நாட்டுக்காக அதிக கோல் அடித்த வீரராக விளங்கிய பழம்பெரும் ஜாம்பவான் யூசிபியோவின் ( 9 கோல்கள்) சாதனையை ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளார்.

 

இதன் மூலம் தனது 10ஆவது உலகக் கிண்ண கோலுடன் போர்த்துக்கல் நாட்டின் அதிகபட்ச உலகக் கிண்ண கோல் அடித்தவர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *