2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
வருடாந்தம் மே மாதம் 12ம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன் மூன்றாவது நாளாகிய இன்று தர்மபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசாவால் இன்று(14) முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.


