கிளிநொச்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, ஆணைக்குழுவின் தலைவர் தயா லங்காபுர மற்றும் பணிப்பாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர ஆகியோர் தலைமை தாங்கினர்.

 

இந்த கலந்துரையாடலில், ஆணைக்குழு உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்கள் நளாயினி இன்பராஜ் மற்றும் அஜிதா பிரதீபன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களின் தகவல் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *