கிழக்கின் தொழில் வாய்ப்புகளுக்கான சந்திப்பு தளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2026 நிகழ்வானது மட்டக்களப்பில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.

Batticaloa Expo 2026 கண்காட்சியானது எதிர்வரும் ஒக்டோபர் 1,2,3 மற்றும் 4 திகதி வரையான நான்கு நாட்கள் மட்டக்களப்பு – கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குடும்ப சகிதம் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த வர்த்தக கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு (16) திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் விடுதியில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கண்காட்சியில் 175 இற்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், முன்னணி தொழில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஒன்று கூடி கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்க இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

இக் கண்காட்சியானது கிழக்கு மாகாணத்திற்கும் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய பங்கினை வகிக்கும்.

ஒரே இடத்தில் பல்வேறு தயாரிப்புகள், மூன்றாவது முறையாக நடைபெறும் இக்கண்காட்சி இதுவரை நடைபெற்ற Batticaloa Expo நிகழ்வுகளில் சிறந்த மற்றும் பிரதானமானதாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், Ceylon institute of Builders (CIOB), EDB மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள் ஆதரவு வழங்குவதன் மூலம் மாவட்ட தொழில்துறைகளை மேம்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மட்டக்களப்பில் அனைவரையும் வரவேற்கும் Batticaloa Expoசிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள், தொழில் நிபுணர்கள் அனைவரையும் Batticaloa Expo 2026 ல் பங்கேற்று கிழக்கு மாகாணத்தில் தொழில் மற்றும் வணிக வலையமைப்புகளை விரிவாக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

ஊடக சந்திப்பில் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *