ஊடகவியலாளர்களுக்கான வெறுப்புப்பேச்சு, AI பயிற்சி

சர்வதோயத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான வெறுப்புப்பேச்சு & AI Journalism தொடர்பான விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் உள்ள  பல்நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.

இந் நிகழ்வில்  வளவாளராக சமுக வலைத்தள ஆய்வாளர்  ரவிந்திரன் விதுர்ஷன் கலந்து சிறப்பித்தார்.

ஊடகச் செயற்பாட்டில் வெறுப்புப்பேச்சை அடையாளம் காணுதல், பொறுப்பான செய்தியறிக்கை மற்றும் AI கருவிகளை ஊடகவியலில் பயன்படுத்துதல் தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு  விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *