பொத்துவில் தமிழ் கோட்டக் கல்விப் பிரிவில் புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியர்கள் கௌரவிப்பு

பொத்துவில் தமிழ் கோட்டக் கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களைச் சிறப்பாகச் சித்தியடையச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிபர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

காஞ்சிரங்குடா கால்நடை அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது, வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் அம்ஜத்கான், கல்வி அபிவிருத்திப் பொறுப்புக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் நசீர் உள்ளிட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டிய அதிகாரிகள், அவர்களையும் பாடசாலை அதிபர்களையும் வாழ்த்தி கௌரவித்தனர்.

மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் கூட்டு அர்ப்பணிப்பு முக்கிய பங்காற்றியுள்ளதாக நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *