திருக்கோவில் பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய தூய்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று (19) முன்னெடுக்கப்பட்டன.
விநாயகபுரம்-04, விநாயகபுரம்-01 மற்றும் திருக்கோவில்-01 பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் பங்களிப்புடன் தயா கமகே கார்மென்ட் முன்பாக உள்ள கடற்கரையில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பினரால் குடிநீர் வசதியும், திருக்கோவில் பிரதேச சபையினால் இயந்திர வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன

