ஆசிய விளையாட்டுக்காக ருமேஷ் தரங்க இன்று ஜப்பான் பயணம்!

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று (19) இரவு ஜப்பான் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ருமேஷ் தரங்கவுக்காக விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஈட்டித் தொகுதி விரைவில் ஜப்பானைச் சென்றடையும் என அவரது பயிற்றுவிப்பாளர் ரொனி பிரசன்ன தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் முதற்கட்டச் சுற்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *