மக்கள் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைச் சூழலை சுத்தமாகவும் சுகாதாரமானதாகவும் பேணும் நோக்கில், காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை(19) முன்னெடுக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டலிலும், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் அவர்களின் ஏற்பாட்டிலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இப்பணிகள் இடம்பெற்றன.
நீண்டகாலமாக முறையான பராமரிப்பின்றி பற்றைக்காடாகவும், தேவையற்ற மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட ஆற்றங்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்கள் குடியிருப்புகளுக்கும் காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலைக்கும் அண்மையில் அமைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், இராணுவத்தினர், பொலிஸார், விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளில் பங்களிப்பு வழங்கினர்.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, சுத்தமான மற்றும் சுகாதாரமான வாழ்விடங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, சுத்தமான மற்றும் சுகாதாரமான வாழ்விடங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.